வெறும் 6 வயசுதான்.. எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த சிறுவனின் சாகச பயணம்!

வெறும் 6 வயசுதான்.. எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த சிறுவனின் சாகச பயணம்!
வெறும் 6 வயசுதான்.. எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த சிறுவனின் சாகச பயணம்!

சாதனை படைக்க வயசுக்கு ஏது தடை என்பதை எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சாகச ட்ரிப் சென்று நிரூபித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் சிறுவன். ஓம் மதன் கர்க் என்ற அந்த 6 வயது சிறுவன் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வரை மலையேறி முடித்த இளம் சிங்கப்பூரார் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். சிறுவன் ஓம் மதன் கர்க்கின் மன உறுதியை பாராட்டும் வகையில் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்தும் உள்ளது.

பயணத்தின் போது ஓம் தனது பெற்றோர் மயூர் கர்க் மற்றும் காயத்ரி மகேந்திரன் உடன் இருந்திருக்கிறார்கள். ஓம் குடும்பத்தின் 10 நாட்கள் நீண்ட சாகச சவாரி கடந்த செப்டம்பர் 28ம் தேதி தொடங்கியதாம். டூரிஸ்ட் கைடு உதவியைப் பெற்ற குடும்பத்தினர், தங்களுடைய ட்ரெக்கிங் பயணங்களை The Brave Tourist, in a seven-part series என்ற பெயரில் யூடியூப் சேனலிலும் பதிவேற்றி இருக்கிறார்கள்.

நேபாளத்தின் 5,364 மீட்டர் உயரத்தில் இருக்கும் தெற்கு முகாமுக்கு 65 கிலோ மீட்டம் தொலைவுக்கு மலையேற்றம் செய்திருக்கிறார் 6 வயதான அந்த சிறுவன். உலகம் முழுவதையும் தன்னை பார்க்க வேண்டும் என்று சிறுவன் கூறியிருப்பதாக டெய்லி ஸ்டார் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

kindergarden மாணவராக இருக்கும் ஓம் மதன் கார்க், பிறந்து இரண்டரை மாதங்களிலேயே தனது மலையேற்றப் பயணத்தை தொடங்கியிருக்கிறாராம். அதன்படி தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளுக்கு ஓம் சென்றிருக்கிறார். ஓமின் தந்தை மயூர் தொழில் ரீதியாக சீனியர் பிசினஸ் ஆய்வாளராக இருந்தாலும், மலையேற்றம் செய்வதை அவர் தீவிரமாக கொண்டிருப்பவராம். ஆகையால் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு குடும்பத்தோடு செல்வதாக திட்டமிட்டிருக்கிறார் மயூர்.

அதன்படி கடந்த நவம்பர் 2021ல் எவரெஸ்ட் அடிவாரத்துக்கு ட்ரிப் சென்றவருக்கு தன்னுடைய மனைவி மகனையும் அழைத்து வந்து இயற்கையின் அழகை காட்ட வேண்டும் என்று எண்ணி அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார். ஆகவே ட்ரெக்கிங் போவதற்கான பல பயிற்சிகளை குடும்பமாக இருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதமாக உடல் ரீதியாக மன ரீதியாக பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து ஆபத்தான பாதையில் ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டர் தொலைவை கடக்க அனுமதிக்கும் 13 நாள் மலையேற்ற திட்டத்தை மயூர் குடும்பம் வகுத்து களத்தில் இறங்கியது. அதன்படி, முதல் நாள் பென்கர் கிராமத்தை அடைய 12 கிமீ நடைபயணம் செய்திருக்கிறார்கள். அந்த பயணத்தின் நடுவில், சிறுவன் ஓமிற்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இருப்பினும் அவர்களது இலக்கை எட்டியிருக்கிறார்கள்.

மேலும் இந்த சாகசப் பயணத்தின் பொது ஃபோர்ட் கேனிங் போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்றிருக்கிறார்கள். இது குறித்து பேசிய போது, "ஃபோர்ட் கேனிங் கடினமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் 30 முறை படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே கடினமாக பயிற்சி மேற்கொண்டிருந்ததால், எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்குச் சென்றபோது, அது சுலபமாக இருந்தது” என்று மயூர் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள். பயணத்தை முடித்துக் கொண்டு குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முழு சாகச பயணத்துக்கும் 10,000 அமெரிக்க டாலர் செலவானதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com