பேட்மிண்டன் பேட்டால் பறிபோன உயிர்! 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

நியூஜெர்சியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், தனது உடன்பிறப்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேட்மிண்டன் பேட்டால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூசி மோர்கன்
லூசி மோர்கன்Facebook

நியூஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோமை சேர்ந்தவர் 6 வயது சிறுமி லூசி மோர்கன். இவர் கடந்த ஜுன் 1-ஆம் தேதி, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைனேவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது தனது சகோதரருடன் பேட்மிண்டன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லூசியின் சகோதரரின் கையில் இருந்த பேட்மிண்டன் பேட்டின் அலுமினிய தகடு மரக்கைப்பிடியில் இருந்து கழன்று, சிறுமியின் தலையிலேயே தாக்கியுள்ளது.

பேட்டின் கூர்மையான துண்டு ஒன்று அவரின் மண்டை ஓட்டிற்குள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து, வலியால் சிறுமி துடிதுடித்த நிலையில், அருகில் இருந்த சிறிய குழந்தைகள் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் சிறுமியை கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அம்மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக ஹெலிகாப்டரின் மூலம் போர்ட்லேண்டில் உள்ள மைனே மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

லூசி மோர்கன்
யானைகளும் நம்மைபோல பெயர் சொல்லித்தான் தங்களுக்குள் அழைக்கிறதாம்! சமீபத்திய ஆய்வு தெரிவிப்பது என்ன?

இந்நிலையில், தனது மகளுக்கு ஏற்பட்ட விபத்தை முழுவதுமாக விவரித்து, தனது வலைபக்கத்தில் இடுகையை பதிவிட்டுள்ளார் லூசியின் தந்தை. மேலும் , லூசிக்காக அவரது குடும்பம் gofundme அமைத்து இதன் மூலம் ஜுன் 10-ஆம் தேதி வரை $123000-க்கும் அதிகமாக பணத்தை பெற்றுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படவே, லூசி மோர்கன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com