\
குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழப்பு

குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழப்பு

குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழப்பு
Published on

குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. பலவீனமாக இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி நகரில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் நகருக்கு அருகே உள்ள கிராமத்தில் உயிரிழந்துள்ளனர். 20 பேருக்கும் அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பெட்ரின்ஜா நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குரோஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வரை உணரப்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com