இந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Published on

இந்தியா-சீனா எல்லை அருகே திபெத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.9 என பதிவாகியுள்ளது.

இந்தியா-சீனா எல்லை அருகே  திபெத்தில் உள்ள நியிக்ச்சி (Nyingchi) என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாசலப்பிரதேசம் அருகே உள்ள பகுதி. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.9 என பதிவாகியுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில்  சீன நேரப்படி காலை 6.34-க்கும் இரண்டாவது முறையாக 8.31 மணிக்கும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com