57 வயதில் திருமணம், 10,000 டாலர் பரிசு.. ஒரேநாளில் டபுளாக அடித்த அதிர்ஷ்டக் காற்று!

57 வயதில் திருமணம், 10,000 டாலர் பரிசு.. ஒரேநாளில் டபுளாக அடித்த அதிர்ஷ்டக் காற்று!

57 வயதில் திருமணம், 10,000 டாலர் பரிசு.. ஒரேநாளில் டபுளாக அடித்த அதிர்ஷ்டக் காற்று!
Published on

57 வயதான ரிச்சர்ட் புர்செல், தனது காதலியை சமீபத்தில் கரம் பிடித்தார். திருமண நாளன்றே அவருக்கு மற்றொரு அதிர்ஷ்டக் காற்றும் வீசியிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் விட்னெஸ் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் புர்செல். 57 வயதான இவர் தனது காதலி விக்டோரியா என்பவரை சமீபத்தில்தான் திருமணம் முடித்தார். திருமண நாளன்றே ரிச்சர்ட் புர்செலின் மணமேடையில் பெரும் அதிர்ஷ்டக் காற்று வீசியது.

திருமணத்திற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஒரு கால்பந்து போட்டிக்காக பரிசுக் கூப்பன் ஒன்றை  ரிச்சர்ட் புர்செல் வாங்கியுள்ளார். தற்செயலாக தான் வாங்கிய பரிசுக் கூப்பன் நினைவுக்கு வரவே, மணமகன் அறைக்குச் சென்று கூப்பனுக்கான ‘ரிசல்ட்’ பார்த்துள்ளார். அதில் அவருக்கு 10,000 டாலர் (ரூ. 9.89 லட்சம்) பரிசு விழுந்திருப்பதை அறிந்து சந்தோஷத்தில் குதித்தார்.

இதுகுறித்து தனது புது மனைவி, நண்பர்களுடன் பரிசு விழுந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ரிச்சர்ட் புர்செல்க்கு ‘டபுள் விஷஷ்’ தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com