\
அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?

அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?

அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?
Published on

ஸ்பெயினில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் இருந்து 53 பேருடன் அட்லாண்டிக் கடல் வழியே ஸ்பெயினை நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஸ்பெயினின் ஹனரி தீவுக்கு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற மீட்புப் படையினர், படகின் உடைந்த பாகங்களை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மீட்டனர்.

காணாமல் போன மற்ற 52 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து பல மணி நேரம் ஆகியிருப்பதால் அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com