இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக விசைப் படகில் தப்ப முயன்ற 51 பேர் கைது

இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக விசைப் படகில் தப்ப முயன்ற 51 பேர் கைது

இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக விசைப் படகில் தப்ப முயன்ற 51 பேர் கைது
Published on

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 51 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவாசிய பொருள்களான பால், அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக ஒரு விசைப்படகில், ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 51 பேரை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை மேல் நடவடிக்கைக்காக திருகோணமலை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com