சீனாவை திணறச் செய்யும் ஸ்டெல்த் ஒமைக்ரான் கொரோனா... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

சீனாவை திணறச் செய்யும் ஸ்டெல்த் ஒமைக்ரான் கொரோனா... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
சீனாவை திணறச் செய்யும் ஸ்டெல்த் ஒமைக்ரான் கொரோனா... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

கொரோனாவை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறிக்கொண்ட சீனா, ‘ஸ்டெல்த்’ எனப்படும் ஒமைக்ரான் கொரோனாவின் துணை வகை வைரஸால் ஆட்டம் கண்டுள்ளது. இன்று சீனாவில் 24 மணி நேரத்தில் 5,200 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒமைக்ரானின் புதிய துணை மாறுபாட்டால் தூண்டப்பட்டது. இன்று சீனாவில் 24 மணி நேரத்தில் 5,200 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுகள் குறைந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை ஒவ்வொரு நாடும் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இந்த சமயத்தில் தான் சீனாவில் கொரோனா மீண்டும் பரவத்துவங்கி உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

'ஸ்டெல்த் ஓமைக்ரான்' பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே:-

1. இந்த ‘ஸ்டெல்த்’ துணை மாறுபாடு BA.2 மாறுபாடு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒமைக்ரான் மாறுபாட்டிலிருந்து வேறுபட்டது. இந்த துணை மாறுபாடு கவலைக்குரியது, ஏனெனில் அதைக் கண்டறிவது கடினம். இந்த மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் முக்கிய பிறழ்வுகளைக் காணவில்லை. அவை தொற்றுநோயைக் கண்டறிய விரைவான PCR சோதனைகளுக்கு பொதுவாக அவசியமானவை. அவை இல்லாததால் இந்த ‘ஸ்டெல்த்’ மாறுபாட்டைக் கண்டறிவது கடினம்

2. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ‘ஸ்டெல்த்’ மாறுபாடு ஒமைக்ரான் வைரஸின் அதே தீவிரத்தன்மையைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

3. தலைச்சுற்றல் மற்றும் சோர்வு ஆகியவை ஸ்டெல்த் ஓமைக்ரானின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகள் வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தோன்றும். மற்ற அறிகுறிகளில் காய்ச்சல், தீவிர சோர்வு, இருமல், தொண்டை வலி, கை வலி, தசை சோர்வு, குளிர் மற்றும் இதய துடிப்பு அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.

4. WHO இன் படி, ஓமைக்ரான் மாறுபாடு முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. டெல்டாவைப் போலவே, ‘ஸ்டெல்த்’ மாறுபாடு நுரையீரலைப் பாதிக்காது, சுவை அல்லது வாசனை இழப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை ‘ஸ்டெல்த்’ கொரோனாவின் தோன்றாது.

5. ‘ஸ்டெல்த்’ துணை மாறுபாடு சீனாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பிலிப்பைன்ஸ், நேபாளம், கத்தார், டென்மார்க் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இது பரவ வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com