\
விபத்தில் சேதமுற்ற கார்
விபத்தில் சேதமுற்ற கார்கூகுள்

அமெரிக்கா | கார் விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மூவர் உட்பட 5 இந்தியர்கள் உயிரிழப்பு

டெக்சாஸ் கார் விபத்தில் 5 இந்தியர்கள் பலி... இச்சம்பவம் அமெரிக்காவில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியர் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த அக்டோபர் 13ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராண்டால்ஃப் அருகே நடந்த பயங்கர சாலை விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். காரில் இவர்களுடன் பயணித்த மற்றொரு பயணி படுகாயமடைந்துள்ளார்.

கார் விபத்து - model image
கார் விபத்து - model imagex page

அமெரிக்காவின் தெற்கு பான்ஹாவிலிருந்து சுமார் 10 கி.லோ மீட்டர் தொலைவில் ஞாயிறு மாலை 6.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் 3 பேர் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் ஆந்திரா கூடூரைச் சேர்ந்த திருமுருகோபி, ஸ்ரீ காளஹஸ்தியைச் சேர்ந்த ரஜினி  சிவா  மற்றும் ஹரி என அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. காயமடைந்த ஒருவர் சாய்சென்னு என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இறந்த ஹரியின் மனைவியாவார். 

இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ. வான கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சேதமுற்ற கார்
"இருதய பாதிப்பால் சிகிச்சை பெறுகிறேன்.." - சவுக்கு சங்கர் மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com