கென்யா: கவிழ்ந்து விழுந்த கண்டெய்னர் லாரியில் சிக்கி நசுங்கிய பேருந்து - விபத்தில் 48 பேர் பலி!

கென்யாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 48 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் லொன்டியனி (londiani) பகுதியில் சாலையில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்து விழுந்ததில் பேருந்து உட்பட சில வாகனங்கள் கண்டெய்னரின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கின. இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கென்யாவில் சமீபத்தில் நடைபெற்ற மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com