தென்கொரியா: வெடித்து சிதறிய விமானம்... 47 பேர் பரிதாப மரணம்... Runway-யிலேயே வெடித்த பயங்கர காட்சி!
தென்கொரியாவில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது திடீரென வெடித்து சிதறியதால், அதில் இருந்த 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து ஜெஜு ஏர் விமானம் 175 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில்தான், விமானம் தென்கொரியாவின் மூவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இந்த கோர விபத்தில் 47 பயணிகள் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புதுறை வீரர்களும், மீட்பு படையினரும் விரைந்து சென்று தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் தரையிறங்கிய போது, கியரில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஓடுதளத்தில் இருந்து சற்று விலகி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி வெடித்து சிதறியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.