காபூல் விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு, நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு: தலிபான்கள்

காபூல் விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு, நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு: தலிபான்கள்

காபூல் விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு, நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு: தலிபான்கள்
Published on

காபூல் விமானநிலையத்தில் நெரிசல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு நிலைமை மோசமானது. நாட்டை விட்டு வெளியேற எண்ணி ஆப்கனான் மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது கூட்டத்தை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, அதேபோல விமான சக்கரங்களில் பயணித்தவர்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தலிபான்கள் தரப்பில் கமெண்டர் ஒருவர் கூறுகையில், “வெளிநாடு செல்வது குறித்த போலி வதந்திகளால் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விமான நிலையத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஆப்கானில் அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் நாட்டை விட்டு தப்பிக்க முயன்று உயிரை விடுவதை விடுத்து வீடுகளுக்குள்ளேயே இருக்கலாம் என தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் குடிமக்களை மீட்க விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. இதனிடையே, பல்வேறு வயதுடைய பெண்கள், ஆண்கள் சிலர், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

''பலர் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறினார்கள். அதனால் நாங்களும் விமான நிலையத்துக்கு வந்தோம்'' என்று காபூல்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com