சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 4 இலங்கை தமிழர்கள் கைது

சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 4 இலங்கை தமிழர்கள் கைது

சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 4 இலங்கை தமிழர்கள் கைது
Published on

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை நல்வழித்துறை கடற்கரை பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு கைது செய்தனர்.

சட்ட விரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட திருகோணமலை, வவுனியா மற்றும் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் படகோட்டிக்கு செலுத்தி ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com