எவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு

எவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு

எவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு
Published on

எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் நீக்கப்பட்டன. அங்கிருந்து 4 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

உலகின் உயரமான சிகரமாக எவெரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் உயரம் கொண்டது. மலையேற்ற வீரர்களின் கனவாக எவரெஸ்ட் இருக்கிறது. ஒரு முறையாவது இதில் ஏறிவிட வேண்டுமென்பதே சாகச விரும்பிகளின் கனவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் ஷெர்பாக்களும் செல்கின்றனர்.

இப்படி மலையேறுபவர்கள் ஆக்ஜிசன் குடுவை, மதுபாட்டில்கள், உணவுப் பொட்டல வகைகள், மருத்துவ பொருட்கள் என பல பொருட்களை கையோடு எடுத்துச் செல்கின்றனர்.  அவற்றைப் பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுகி ன்றனர். இதனால் எவெரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இதனால் எவரெஸ்ட்டை சுத்தம் செய்யும் பணியை நேபாள அரசு தொடங்கியது. நேபாள ராணுவத்தினருடன் இணைந்து ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து, சுகாதாரக் குழுவினர் எவரஸ்ட்டில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தூய்மை பணி நேற்றுடன் முடிவடைந்தது.

இதில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல்கள், காத்மண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் யார் என்ற அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. மலையேற்ற வீரர்கள், தங்களுடன் வருபவர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் உடல்களை கீழே சுமந்து வர இயலாத காரணத்தால் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com