எகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
Published on

எகிப்தில் 4,400 ஆண்டுப் பழமையான கல்லறையை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

கெய்ரோவிற்கு தெற்கே அமைந்துள்ள சக்காரா என்ற இடத்தில் 4,400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றிலும் ஹெய்ரோக்ளிப்ஸ் (Hieroglyphs) எனப்படும் சித்திர எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. எகிப்து வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் பாரோ மன்னரின் சிலைகளும் அங்கு காணப்படுகின்றன.

பாரோ மன்னரின் அரசவையில் தலைமை குருவாக இருந்த வாட்யே, அவருடைய அம்மா, மனைவி மற்றும் உறவினர்களை அந்தச் சித்திரங் கள் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த கல்லறை 10 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும், மூன்று மீட்டர் உயரமும் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘’இந்த வருடத்தின் கடைசி கண்டுபிடிப்பு இது. சிலைகளும் வண்ணங்களும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன. இது தலைமை குரு வாட்யே-யின் கல்லறை’’  என்று அமைச்சர் கலீல் எல் எனானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com