\
நெஞ்சு வலியினால் மருத்துவரை நாடியவருக்கு எக்ஸ்ரே கொடுத்த அதிர்ச்சி!

நெஞ்சு வலியினால் மருத்துவரை நாடியவருக்கு எக்ஸ்ரே கொடுத்த அதிர்ச்சி!

நெஞ்சு வலியினால் மருத்துவரை நாடியவருக்கு எக்ஸ்ரே கொடுத்த அதிர்ச்சி!
Published on

அமெரிக்காவில் 38 வயதான Brad Gauthier நெஞ்சு வலியினால் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ‘எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்துடுவோம்’ என சொல்லி எக்ஸ்ரே எடுக்க சொல்லியுள்ளார். அதன்படியே எக்ஸ்ரேவும் எடுத்துள்ளார் அந்த நபர். அதன் ரிப்போர்ட் தான் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

அதில் ஹெட்செட் வடிவில் ஒரு ஏர் பாட் இருந்துள்ளதை மருத்துவர் கண்டு சொல்லியுள்ளார். அதன் பிறகு தான் அந்த நபர் உட்பட அனைவருக்கும் அவர் தூங்கும் போது ஆப்பிள் ஏர் பாடை விழுங்கியுள்ளார் என்பது தெரிந்தது. அது அவரது உணவு குழாய்க்கு அருகில் சிக்கி இருந்துள்ளது.

எண்டோஸ்கோபிக் முறையின் கீழ் அதை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com