வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு: 37 பேர் பலி!

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு: 37 பேர் பலி!

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு: 37 பேர் பலி!
Published on

வியட்நாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
வியட்நாமில் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகிறது. இந்த புயல் மழை நேற்று அதிகரித்தது. இதில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் முழ்கின. சாலைகள், தெருக்கள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்துவிழுந்தன. 16,740 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணங்களில் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது.
இந்த மழை மற்றும் நிலச்சரிவுக்கு 37 பேர் பலியாகியுள்ளனர். 40 பேரை காணவில்லை என்று அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 
இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மக்கள் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com