இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடும் மோதல்: 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடும் மோதல்: 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடும் மோதல்: 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து 100க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்காப்பு நடவடிக்கையாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெருசலேம் நகரை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவி எல்லை மீறியதால், அவ்வமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் கூறும்போது,” ஹமாஸ் அமைப்பின் உளவுத்துறை தலைவர்கள் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டனர். மற்றொரு ஏவுகணை ராக்கெட் ஏவுதளத்தையும், ஹமாஸ் அமைப்பின் அலுவலகம் மற்றும் தலைவர்களை குறித்துவைத்து தொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.  

இதனிடையே ஜெருசலேமின் அல்-அக்சா மசூதியை காக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. திங்களன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் காஸாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற தாக்குதல்களில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காஸா பகுதியில் 28 பேரும், இஸ்ரேலில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com