மெக்ஸிகோ: 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்ஸில்லா’ சுறாவுக்கு புதுப் பெயர்!

மெக்ஸிகோ: 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்ஸில்லா’ சுறாவுக்கு புதுப் பெயர்!

மெக்ஸிகோ: 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்ஸில்லா’ சுறாவுக்கு புதுப் பெயர்!
Published on

நியூ மெக்சிகோவில் 2013 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்ஸில்லா சுறா’வுக்கு  முறையான  பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

20132ஆம் ஆண்டு மே மாதம் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத சுறாவுக்கு, ஆரம்பத்தில் "காட்ஜில்லா சுறா" என்று பெயரிடப்பட்டது. தற்போது ஏழு ஆண்டுகள் விரிவான அகழாய்வுகளுக்கு பிறகு அந்த சுறாவுக்கு முறையான பெயர் வழங்கப்பட்டது. 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த சுறாவின் புதைபடிவங்கள், நியூ மெக்சிகோவின் அல்புகெர்க்கிக்கு கிழக்கே தோண்டப்பட்ட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது ந்த சுறாவுக்கு டிராகோப்ரிஸ்டிஸ் ஹாஃப்மானோரம் அல்லது ஹாஃப்மேனின் டிராகன் சுறா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுறாவின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தை சொந்தமாகக் கொண்ட குடும்பத்தை வுரவிக்கும் வகையில் இந்த பெயரிடப்பட்டது.

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த சுறாவின் பற்கள் இது ஒரு தனித்துவமான இனமாக இருக்கலாம் என்பதை காட்டுகிறது. இந்த பற்கள் "இரையைத் துளைப்பதை விட இரையை கவ்வி பிடிப்பதற்கும் நசுக்குவதற்கும் சிறந்தது" என்று கண்டுபிடிப்பாளர் ஜான்-பால் ஹோட்நெட் கூறினார்.

இந்த வாரம், ஹோட்நெட் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் நியூ மெக்ஸிகோ இயற்கை வரலாறு மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில், 2013இல் அகழாய்வு மூலமாக தாங்கள் கண்டறிந்த சுறாவை ஒரு தனி இனமாக அடையாளம் காட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com