29வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை; கதறிய பெற்றோர்.. நியூயார்க்கில் நடந்த பரிதாபம்!

29வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை; கதறிய பெற்றோர்.. நியூயார்க்கில் நடந்த பரிதாபம்!

29வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை; கதறிய பெற்றோர்.. நியூயார்க்கில் நடந்த பரிதாபம்!
Published on

29வது மாடியில் இருந்து 3 வயது ஆண் குழந்தை கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் நியூயார்க்கில் அரங்கேறியிருக்கிறது.

நியூயார்க்கின் ஹார்லெம் பகுதியில் உள்ள டைனோ டவர்ஸ் என்ற அபார்ட்மென்டில், சனிக்கிழமை (ஜுலை 2) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வீட்டின் ஜன்னல் வழியாக வெளியேறிய அந்த 3 வயது குழந்தையை கண்ட தாயார், என் குழந்தையை காப்பாற்றுங்கள் என கத்தி கதறி துடித்திருக்கிறார். அவரது கூக்குரலை கேட்ட அப்பார்ட்மெண்ட் வாசிகள் வெளியே சென்று பார்த்தபோது குழந்தை விழுவது போல் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து குழந்தையின் தந்தை கீழே இருந்து தனது மகனை காப்பாற்ற கட்டடம் மீது ஏறிய போது அது பலனளிக்காமல் போயிருக்கிறது. ஏனெனில், அந்த சமயத்தில் 3 வயது குழந்தை தவறுதலாக கீழே குதித்திருக்கிறது.

உடனடியாக, ஹார்லெம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே குழந்தையின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள் போலீசார். அப்போது அப்பார்ட்மெண்டின் 34வது மாடியில் வசிக்கும் நிடியா கோர்டேராவிடம் விசாரித்த போது, “என்னுடைய குழந்தைகள் 29வது மாடியில் யாரோ சண்டையிடுவது போன்ற சத்தத்தை கேட்டு பால்கனி வழியாக எட்டி பார்த்திருக்கிறார்கள்.

அப்போது மஞ்சள் நிற டி-ஷர்ட்டும், டையப்பர் மட்டுமே அணிந்திருந்த குழந்தை ஒன்று கீழே விழுவது போன்று தெரிந்தை கண்டதாக கூறினார்கள்” என தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com