ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே ரஷ்யாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 4 அமெரிக்கர்கள், ஒரு ஜெர்மனியர், மற்றும் 2 ரஷ்யர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். புதிதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்துள்ள ரஷ்யர்கள் மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தனர். அதாவது உக்ரைன் நாட்டு தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் உடை அணிந்து இருந்தது, பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
இதனிடையே பூமியில் நடக்கும் போர் குறித்து விண்வெளி வீரர்களுக்கு தெரியும் என்றும், அது எந்த வகையிலும் ஆய்வை பாதிக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: ரஷ்யாவிடம் இருந்து இன்னும் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் எவை? நிறுத்திய நிறுவனங்கள் எவை?

