2025 மருத்துவத்துக்கான நோபல் பரிசு | 3 வல்லுநர்களுக்கு அறிவிப்பு! எதற்காக கிடைத்தது தெரியுமா?
2025 மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 மருத்துவ வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வல்லுநர்களுக்கு நோபல் பரிசு..
2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வேதியியல், அக்டோபர் 8 அன்று இலக்கியம், அக்டோபர் 9 அன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு பெறுவோர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10.41 கோடி தரப்படுகிறது.