குடியிருப்புக்குள் விழுந்து நொறுங்கியது விமானம்: 29 பேர் உயிரிழப்பு!

குடியிருப்புக்குள் விழுந்து நொறுங்கியது விமானம்: 29 பேர் உயிரிழப்பு!

குடியிருப்புக்குள் விழுந்து நொறுங்கியது விமானம்: 29 பேர் உயிரிழப்பு!
Published on

காங்கோ நாட்டில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். 

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ளது கோமா நகரம். இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பெனி நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் விமான பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது.

இதில் விமானத்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கிழே இருந்த பொதுமக்களில் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com