\
நேபாளத்தில் புயல் மழை: 27 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்

நேபாளத்தில் புயல் மழை: 27 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்

நேபாளத்தில் புயல் மழை: 27 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்
Published on

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள புயல்மழைக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாள நாட்டின் தென்பகுதியில், இந்திய எல்லை பகுதியில் நேற்று மாலை புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக பரா (Bara), பர்சா (Parsa) மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள், இடிந்துவிழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்பட்ட விபத்துகளில் 27 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

மீட்புப் பணிகளில், தேசிய அவசரகால மீட்பு படையினருடன் ராணுவம், போலீசார் இணைந்து ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி (K P Sharma Oli ) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com