ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர்: 24 மணி நேரத்தில் 266 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் 17வது நாளை எட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 266 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் - இஸ்ரேல்
ஹமாஸ் - இஸ்ரேல் புதிய தலைமுறை

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் 17வது நாளை எட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 266 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து காசா சுகாதாரத்துறை தெரிவிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில், தெற்கு காசாவை மையமாகக் கொண்டே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.” என்று தெரிவித்தது.

இதற்கு விளக்கமளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ”தாங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்துவருகிறோம். ஆனால் அவர்கள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை கேடயமாக பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள குழுவினருடன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com