ஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

ஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

ஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
Published on

அமெரிக்காவில் படித்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (26). கம்யூட்டர் என்ஜினீயரான இவர் ஐதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். பின்னர்  மேற்படிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்றார். கன்சாஸில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத் தில் படித்துவந்தார். 

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி கன்சாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் சரத் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந் தார். அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. கொள்ளையடிப்பதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கன்சாஸ் போலீசார் தெரிவித் துள்ளனர்.

(சந்தேக நபர்)

அதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ காட்சியை வெளியிட்டு, குற்றவாளியை பற்றிய தகவல் சொன்னால், பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

சரத்தின் உறவினர் சந்திப் கூறும்போது, ‘முழு ஸ்காலர்ஷிப் கிடைத்ததின் அடிப்படையில் மிசெளரி பல்கலைக்கழகத்தில் சரத் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, துப்பாக்கிச்சூடு விவகாரம் பற்றி தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது எங்களுக்கு மோசமான நாள்’ என்றார். 

சரத்தின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான உதவிகளை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான வேலைகளை செய்துவருவதாக சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்சாஸ் நகரில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐதராபாத் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே பகுதியில் ஐதராபாத்தை சேர்ந்த மாணவர் இப்போது கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com