உலகம்
இஸ்ரேல்-காசா மோதலில் 257 பேர் மரணம், 8,538 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம்
இஸ்ரேல்-காசா மோதலில் 257 பேர் மரணம், 8,538 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் காசா பகுதியில் 257 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 8,538 பேர் காயமடைந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது.
இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் 30 மருத்துவ மையங்கள் சேதமடைந்தன, அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் இயங்குகின்றன. காயமடைந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு "பெரும் சுகாதார வசதிகள்" தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.