அமெரிக்கா| 1,630 கிலோ எடை.. 25 அடி நீளம்.. டைனோசர் எச்சம் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான வடக்கு டகோடாவில், டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்எக்ஸ் தளம்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான வடக்கு டகோடாவில், டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டென்வெர் அகழ்வாய்வாளர்கள் நடத்திய ஆய்வில், டைனோசரின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம் டைனோசர் வாழ்ந்த காலத்தைக் கணிக்க முடியும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், டைனோசரின் எச்சங்கள் டென்வெர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், “இந்த டைனோசர் 1,630 கிலோ எடை கொண்டதாகவும் மூக்கிலிருந்து வால் வரை 25 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 10 அடி உயரம் கொண்டதாகவும் இருந்திருக்கலாம். 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம். அது, இறக்கும்போது அதற்கு 13-15 வயது இருந்திருக்கலாம்” என மதிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: தேர்தல் தோல்வி| அதிருப்தியில் அஜித் பவார்.. தாய் கட்சிக்கு திரும்ப தயாராகும் 18 எம்.எல்.ஏக்கள்!

ஆய்வாளர்கள்
இந்தியாவிலும் இருந்தது டைனோசர் - புதிய ஆதாரம் வெளியானது: எங்கே தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com