‘ஒரே இரவில் உலக கோடீஸ்வரன்..!’ - 24 வயது இளைஞருக்கு ரூ.27 ஆயிரம் கோடி பரிசு

‘ஒரே இரவில் உலக கோடீஸ்வரன்..!’ - 24 வயது இளைஞருக்கு ரூ.27 ஆயிரம் கோடி பரிசு

‘ஒரே இரவில் உலக கோடீஸ்வரன்..!’ - 24 வயது இளைஞருக்கு ரூ.27 ஆயிரம் கோடி பரிசு
Published on

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு கிடைத்த பரிசு மூலம் ஒரே இரவில் உலக கோடீஸ்வரராக ஆகிவிட்டார்.

சினோ பையோபார்மாகியூடிகல் கம்பெனியின் நிறுவனர் ஸி பிங். இவரது மனைவி செங் சங் லிங், நிறுவனத்தின் துணைத் தலைவராக
உள்ளார். இவர்களின் ஒரே மகன் எரிக் ஸி. வாஸிங்டனில் உள்ள சீடில் நகரத்தில் எரிக் ஸி பிறந்தார். பெய்ஜிங்கில் உள்ள தொடக்க
பள்ளியில் படித்த இவர், ஹாங்காங்கில் மேல்நிலைப்பள்ளியை முடித்தார். அதன்பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் படித்தார். தற்போது
24 வயது நிரம்பிய இந்த இளைஞருக்கு ஒரே இரவில் ஜாக்பாட் அடித்துள்ளது.

தங்கள் மகனுக்கு பரிசளிக்க நினைத்த ஸி பிங் மற்றும் செங் சங் லிங், அவரது பெயரில் சினோ பையோபார்மாகியூடிகல் நிறுவனத்தின்
2.7 பில்லியன்ஸ் பங்குகளை மாற்றியுள்ளனர். இதன்மூலம் எரிக் ஸி ஒரே இரவில் 3.8 பில்லியன் டாலர் மதிப்புடைய உலக
கோடீஸ்வரன் ஆகியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 27 ஆயிரம் கோடியாகும். ஹாங்காங்கில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளது.
ஹாங்காங்கில் பரிசு மற்றும் பரம்பரை சொத்து மாற்றம் ஆகியவற்றிற்கு வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை என்பதால்
அங்கு இந்த பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

ஸி பிங்கிற்கு இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன. தாய்லாந்திலும் இவருக்கு ஏராளமான தொழில்கள் சென்றுகொண்டிருக்கின்றன.
தற்போது நிர்வாக வேலைகளை குறைப்பதற்கும், தனது குடும்பத்தினரின் மதிப்பை உயர்த்துவதற்கும் தனது மகன் பெயரில் பங்குகளை
அவர் மாற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பரிமாற்றம் தொடர்பாக ஆனால் இதுவரை ஸி பிங் வாய் திறக்காமல் இருப்பது
குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com