\
உலகளவில் 24.37 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 24.37 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 24.37 கோடி பேருக்கு கொரோனா
Published on: 

உலகளவில் 24.37 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 49.52 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 22.08 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக 79,554 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 1,547 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்தம் 4.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7,55,642 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் ஒரேநாளில் 14,502 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 447 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2.17கோடியாக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 6,05,211ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் புதிதாக 49,298 பேருக்கும், ரஷ்யாவில் 37,141 பேருக்கும், சீனாவில் 43 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com