\
சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்: 23 பேர் பலி

சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்: 23 பேர் பலி

சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்: 23 பேர் பலி
Published on

சோமாலியாவில் கடந்த 14-ம் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 358 பேர் கொல்லப்பட்ட ஈரம் காய்வதற்குள் அதே இடத்தில் மீண்டும் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் உள்ள நாசா - ஹப்லாட் ஓட்டல் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட இரண்டு லாரிகளில் வந்த பயங்கரவாதிகள் அதை வெடிக்கச் செய்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்தப் பகுதியில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாகி உள்ளனர். 

இந்தப் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளும் கடும் சண்டை நடந்துவருவதாகவும் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்பிரிக்க இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான, அல் -சபாப் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், மொகதிஷுவில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 358 பேர் கொல்லப்பட்டனர். இந்த ரத்தத்தின் ஈரம் காய்வதற்குள்ளாகவே, அடுத்து அதே பகுதியில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு மக்களை பீதியடைய செய்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com