கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி
Published on

உலக அளவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில்199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது. இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com