நைஜீரியாவில் 22 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் 22 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் 22 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு
Published on

நைஜீரியாவில் 22 அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. லாகோஸ் நகரில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 22 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டுமானப் பணியின்போதே சரிந்து விழுந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 100 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமாக சரிந்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com