20 ஆண்டுகள்.. ஆனாலும் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை - கல்பனா சாவ்லா நினைவு தினம்

20 ஆண்டுகள்.. ஆனாலும் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை - கல்பனா சாவ்லா நினைவு தினம்
20 ஆண்டுகள்.. ஆனாலும் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை - கல்பனா சாவ்லா நினைவு தினம்

முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய பெண் வீரர் என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. அவரைப்பற்றிய ஓரு சிறு தொகுப்பைப் பார்க்கலாம். 

இந்தியாவிலிருந்து முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண் வீரர் என்ற பெருமையை பெற்றவர் கல்பனா சாவ்லா. இந்தியாவில் ஹரியானா மாநிலம் கர்னலில் மார்ச் 17, 1962ஆம் ஆண்டு பிறந்தார். கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் பயின்ற கல்பனா சாவ்லா, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் படிப்பை முடித்த இவர், 1982ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். 1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் முனைவர் பட்டத்தை பெற்ற இவர், நாசா அமெஸ் ஆராய்ச்சிக் கூடத்தில் பணியில் சேர்ந்தார்.

இவருடைய முதல் விண்வெளி கனவு 1997ஆம் ஆண்டு நிறைவேறியது. அந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி 6 பேர் கொண்ட குழுவில் ஒருவராக STS-87 சோவியத் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றார். ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றார். அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

STS-87க்குப் பின்னர் நாசா விண்வெளி அலுவலகத்தில் தொழில்நுட்ப வல்லுநராக நியமிக்கப்பட்டார் கல்பனா. அதன்பின் STS-107-இல் பயணிக்க ஜனவரி 16, 2003 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளியிலிருந்து திரும்புகையில் தரையிறங்கும் சில விநாடிகளுக்கு முன்பு விண்கலம் வெடித்துச் சிதறியதில் 7 பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருந்த கல்பனா சாவ்லாவும் பிப்ரவரி 1, 2003 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரியானாவில் இருந்தபோது உள்ளூர் ஃப்ளையிங் க்ளபுகளுக்கு தனது தந்தையுடன் சென்றபோது ஏற்பட்ட ஆசையே அவரை ஒரு விண்வெளி வீரராக உருவாக்கியது. இத்துடன் அவர் உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அவரின் சாதனைகள் நம் அனைவர் நினைவிலும் நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com