வெப்பமாக மாறிவரும் பூமி
வெப்பமாக மாறிவரும் பூமிபுதியதலைமுறை

IMD: 2024ம் ஆண்டு சராசரி வெப்பத்தைவிட 0.65 செல்சியஸ் அதிகம்

பூமி வெப்பமயமானதை அடுத்து 1901 லிருந்து 2024 வரை ஒப்பீடு செய்ததில் 2024ம் ஆண்டு அதிகப்பட்ச வெப்பநிலையானது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Published on

நமது பூமியானது, வெப்பமயமாகிவருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி எச்சரித்துக்கொண்டு இருக்கின்றனர். அதன்படி சென்ற ஆண்டை வெப்ப ஆண்டாக IMD கூறுகிறது.

சென்ற ஆண்டு, அதிக மழைப்பொழிவும், அதிக அளவு வெப்பத்தின் தாக்கமும் இருந்தது. இருப்பினும், கடந்த 1901லிருந்து 2024 வருடங்கள் வரை ஒப்பீடு செய்து பார்த்ததில் சராசரி வெப்பத்தைவிட 0.65 செல்சியஸ் வெப்பநிலையானது அதிகரித்து இருந்ததாக IMD கூறியுள்ளது.

41 additional days of extreme heat in 2024
வெப்பம் pt web

இதில் கடைசி மூன்று மாதமான அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை வெப்பநிலையானது சராசரியை விட அதிகரித்து இருந்ததாக IMD கூறியுள்ளது.

IMD தொடர்ந்து பூமி வெப்பமயமாதலை கவனித்து வந்ததில் 2016ம் ஆண்டு வழக்கத்தை விட 0.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில் சென்ற வருடம் இந்த செல்ஸியஸை முறியடித்து வழக்கத்தை விட 0.65 டிகிரி அதிகரித்து காணப்பட்டது. இது 2016 அதிகரித்த வெப்பநிலையைவிட 0.11 செல்ஸியஸ் அதிகம்.

இந்நிலையில், அண்டார்டிகாவிற்கு மேலே சுமார் 30 கிமீ உயரத்தில் உள்ள நடுத்தர அடுக்கு மண்டலத்தின் வெப்பநிலை, சராசரியா மைனஸ் 80 டிகிரி செல்சியஸிற்கு இருக்கும். ஆனால் கடந்த வருடம் ஜூலை 7 அன்று, எடுக்கப்பட்ட ஆய்வில் மைனஸ் 65 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. இது இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமாக இருந்ததாக நாசா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com