உக்ரைன்: மரியுபோல் நகரின் அருகே 200 பெரிய சவக்குழிகள் கண்டெடுக்கப்பட்டதா?

உக்ரைன்: மரியுபோல் நகரின் அருகே 200 பெரிய சவக்குழிகள் கண்டெடுக்கப்பட்டதா?
உக்ரைன்: மரியுபோல் நகரின் அருகே 200 பெரிய சவக்குழிகள் கண்டெடுக்கப்பட்டதா?

அமெரிக்க நிறுவனமான மக்ஸார் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) பகிர்ந்துள்ள செயற்கைக்கோள் படத்தில், உக்ரைனிய நகரமான மரியுபோல் அருகே 200 மிகப்பெரிய சவக்குழிகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மரியுபோலுக்கு வெளியே உள்ள மன்ஹுஷ் நகரத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து நீண்ட வரிசையாக தோண்டப்பட்டுள்ள  மிகப்பெரிய சவக்குழிகளை இந்த செயற்கைகோள் படம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு போரின்போது கொல்லப்பட்ட 9,000 உக்ரைனிய குடிமக்களை ரஷ்யா புதைத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.



இது தொடர்பாக பேசிய மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ, "நகரத்திலிருந்து கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை எடுத்து மன்ஹுஷில் சவக்குழிகளில் புதைத்ததன் மூலம் ரஷ்யர்கள் தங்கள் இராணுவ குற்றங்களை மறைத்துள்ளனர் " என்று குற்றம்சாட்டினார். "இறந்தவர்களின் உடல்கள் டிரக்கில் கொண்டு வரப்பட்டு அவை கல்லறைகளில் கொட்டப்பட்டன " என்று பாய்சென்கோவின் உதவியாளர் பியோட்ர் ஆண்ட்ரியுஷ்செங்கோ கூறினார். இது தொடர்பாக ரஷ்யாவிடம் இருந்து உடனடியாக எதிர்வினை எதுவும் இல்லை.

கடந்த வியாழனன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மரியுபோல் நகரை முழுவதுமாக கைப்பற்றியதாக அறிவித்தார். அங்குள்ள ஒரு பெரிய இரும்பு ஆலையில் இன்னும் 2,000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த ஆலைக்குள் நுழைவதற்கு "ஒரு ஈ கூட வராதபடி" ஆலையை அடைத்து வைக்க புடின் உத்தரவிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com