\
`குடும்பங்கள் கொண்டாடும்...’- வார இறுதி கலெக்‌ஷனால் 200 கோடிகளை தொட்ட அவதார் 2 வசூல்!

`குடும்பங்கள் கொண்டாடும்...’- வார இறுதி கலெக்‌ஷனால் 200 கோடிகளை தொட்ட அவதார் 2 வசூல்!

`குடும்பங்கள் கொண்டாடும்...’- வார இறுதி கலெக்‌ஷனால் 200 கோடிகளை தொட்ட அவதார் 2 வசூல்!
Published on

அவதார் 2 படத்தின் நான்காம் நாள் வசூல், 200 கோடி ரூபாயை எட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

`அவதார் 2: தி வே அஃப் வாட்டர்’ திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று நாட்களில் உலகளவில் வெறும் 100 கோடி ரூபாய் மட்டுமே படம் எட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் வசூல் இதையும் விட அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் படம் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இப்படியான நிலையில், படம் நான்காம் நாளில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. வார விடுமுறையின்போதுதான் வசூல் உயர்ந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அவதார் 2: தி வே அஃப் வாட்டர் படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். எதிர்ப்பாத்தபடியே வசூல்ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதென்றே சொல்லப்படுகிறது. இருப்பினும், வி.எஃப்.எக்ஸ். பார்வையாளர்களாலும் திரைக்கதை விமர்சகர்களாலும் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுவருகிறது.

படத்தின் வசூல் 12-15 கோடி ரூபாயை எட்டிய பிறகு எதிர்பாராத விதமாகச் சரிவைச் சந்தித்தது. அதன்பின் வார இறுதி என்பதால், அதிக பார்வையாளர்களை படம் பெற்றிருக்கிறது. அந்த வகையில், நான்காம் நாளில் முன்பதிவு வசூலாக மட்டும் ரூ. 5.7 கோடியை படம் பெற்றிருக்கிறதாம்.

சர்வதேச பாக்ஸ் ஆப்பீஸ் வசூலாக இப்படம் 500 மில்லியன் டாலர்களைத் தாண்டி வசூலிக்கும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை 434 மில்லியன்க்கு மேல் வசூலித்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் உயர்ந்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் சர்வதேச பாக்ஸ் ஆப்பீஸ் வசூலில் 2 பில்லியனை வசூலிக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

- ஷர்நிதா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com