\
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 20 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 20 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 20 பேர் உடல் சிதறி பலி
Published on

காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சரியாக கணக்கிட முடியவில்லை என்றும் தோராயமாக 20 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தலிபான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் காயமடைந்திருக்கின்றனர்.

உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதையும் படிக்க: மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com