உலகம்
கிரீஸ் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கிரீஸ் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
கிரீஸ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை தீயணைப்புப் படையினர்
தொடர்ந்து மீட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்புக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மந்திரா பகுதியில்
பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளின் கூரைகள் மற்றும் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
தற்போது வானிலை சீரானதை தொடர்ந்து, வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அவர்கள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.