உலகம்
ஈரானில் அதிகரிக்கும் காற்று மாசு: ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு
ஈரானில் அதிகரிக்கும் காற்று மாசு: ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு
ஈரானில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்குப் பின் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் காற்று மாசு இரு மடங்காக உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படாத காரணத்தினாலும், தொழிற்சாலைகள் வெளியிடும் அளவுக்கு அதிகமான புகையினாலும், இந்த அளவுக்கு காற்றில் மாசு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த ஈரான் அரசு முயற்சித்து வருகிறது.