சுற்றுலா பயணி சுட்டுக் கொலை: பிரேசில் காவல்துறை அதிகாரி மீது வழக்கு
பிரேசிலில் சுற்றுலா பயணியை போதைப் பொருள் கடத்துபவர் என நினைத்து சுட்டுக் கொலை செய்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
பிரேசில் நாட்டில் ஸ்பெயின் சுற்றுலா பயணியை போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என தவறாக கருதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி டேவி டாஸ் சான்டோஸை நீதிமன்றம் விடுவித்தது. பணிச் சுமை காரணமாக அந்த அதிகாரி தவறு செய்து விட்டதாக குறிப்பிட்ட நீதிமன்றம் அவருக்கு காவல் நிலையத்துக்குள்ளேயே அமர்ந்து பணியாற்றும் வேலையை வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள ரோசின்ஹா குடிசைப் பகுதியில் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதால் ஸ்பெயின் சுற்றுலா பயணி சுட்டுக் கொல்லப்பட்டார்.