நடுவானில் மோதிய போர் காலத்து விமானங்கள்.. துண்டுத்துண்டாக வெடித்து சிதறிய பகீர் காட்சி!

நடுவானில் மோதிய போர் காலத்து விமானங்கள்.. துண்டுத்துண்டாக வெடித்து சிதறிய பகீர் காட்சி!
நடுவானில் மோதிய போர் காலத்து விமானங்கள்.. துண்டுத்துண்டாக வெடித்து சிதறிய பகீர் காட்சி!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச காட்சியின் போது போர் விமானங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் அந்நாட்டு விமான படையின் சாகச நிகழ்ச்சி நடந்தன. இதில் பெரிய ரக போயிங் B-17 போர் விமானனும், சிறிய ரக பெல் P-63 கிங் கோப்ரா என்ற விமானமும் வானில் பறந்தன.

அப்போது, இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானங்களும் துண்டுத் துண்டுகளாக வெடித்துச் சிதறின.

இதில் இரு விமானங்களும் மோதிக் கொண்டதை அடுத்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இருப்பினும் விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவாயிற்று என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

விபத்தில் சிக்கிய இரண்டும் போர் விமானங்கள் என்பதால் அதில் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிராக போயிங் விமானம் குண்டு மழை பொழியும் விமானமாக முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, சிறிய ரக விமானமான கிங் கோப்ரா சோவியத் படையால் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com