எல்லா வழிகளும் அடைப்பு; காஸாவில் தண்ணீர் சுத்தமாக இல்லை! தாகத்தில் ஏங்கி தவிக்கும் 20 லட்சம் மக்கள்

காஸா பகுதியில் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான போர் 8ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இதுவரையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோரும், காஸாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே காசா பகுதியில் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்ட்தால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

காசாவில் ஏற்கனவே மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பாலஸ்தீனிய மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com