அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர்களான தந்தையும் மகளும் கொரோனா தாக்கி உயிரிழப்பு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர்களான தந்தையும் மகளும் கொரோனா தாக்கி உயிரிழப்பு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர்களான தந்தையும் மகளும் கொரோனா தாக்கி உயிரிழப்பு
Published on

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், மருத்துவர்களுமான தந்தை மற்றும் மகள் அமெரிக்காவில் கொரோனா நோய்த் தாக்கத்தால் உயிரிழந்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் மருத்துவர் சத்யேந்தர் தேவ் கண்ணா (78). இவரது மகள் பிரியா கண்ணா (43). இவர்கள் இருவருமே அமெரிக்காவில் மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தனர். சத்யேந்தர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸில் உள்ள மருத்துவமனையில் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழ்ந்தவர். இவரது மகள் பிரியா கண்ணா, மருத்துவமனையின் தலைவராக இருந்தவர்.

இவர்கள் இருவருமே தற்போது அமெரிக்காவை முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சேவை செய்தனர். இதன்மூலம் இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சத்யேந்தர் கண்ணாவிற்கு கிளாரா மாஸ் மெடிக்கல் மையத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து மகள் பிரியா கண்ணாவிற்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர்களது இழப்பு ஈடு செய்ய முடியாதது என நியூ ஜெர்ஸியின் ஆளுநர் முர்ஃபி தெரிவித்துள்ளார். அத்துடன், “இருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக கொரோனாவால் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க எங்களிடம் வார்த்தை இல்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com