கலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு
Published on

கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பிடித்து 34 பேர் பலியான விபத்தில் 2 இந்தியர்களும் உயிரிழந்துள்ள தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ளது சான்டாகுரூஸ் தீவு. இங்கு கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுகளில் வந்து செல்வது வழக்கம். அங்கு ஸ்கூபா டைவிங்கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 38 பேர் கொண்ட குழு, படகில் அந்த தீவின் கடல்பகுதிக்கு கடந்த 2 ஆம் தேதி சென்றது. அப்போது, படகில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இந்தியர்கள் 2 பேரும் உயிரிழந்த தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் தியோபுஜாரி என்பவரின் மகள் சஞ்சீரி என்பவரும் அவர் கணவர் காஸ்துப்பும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். சஞ்சீரி அங்கு பல் மருத்துவராகவும் காஸ்துப் நிதிநிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வந்தனர். இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com