\
எலான் மஸ்க்கின் தனி விமானத்தை டிராக் செய்த இளைஞரின் அடுத்த டார்க்கெட் இவர்கள்தான்

எலான் மஸ்க்கின் தனி விமானத்தை டிராக் செய்த இளைஞரின் அடுத்த டார்க்கெட் இவர்கள்தான்

எலான் மஸ்க்கின் தனி விமானத்தை டிராக் செய்த இளைஞரின் அடுத்த டார்க்கெட் இவர்கள்தான்
Published on

எலான் மஸ்க்கின் தனி விமானத்தை டிராக் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஜாக் ஸ்வீனி, இப்போது ரஷ்ய கோடீஸ்வரர்களின் விமானங்களைக் கண்காணிக்க தனியாக ட்விட்டர் ஐடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் தனி விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்ற விவரத்தை டிராக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் 19 வயதான கல்லூரி மாணவர் ஜாக் ஸ்வீனி. டிராக் செய்வதை நிறுத்த எலான் மஸ்க் தரப்பிலிருந்து சில ஆஃபர்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் ஜாக் ஸ்வீனி தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலாக, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் விமானங்கள் எங்கெல்லாம் செல்கிறது என்ற விவரத்தை கண்காணிக்க தனியாக ட்விட்டர் ஐடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜாக் ஸ்வீனி, "இந்த தன்னலக்குழுக்கள் வைத்திருக்கும் விமானங்கள் முற்றிலும் வேடிக்கையானவை. மற்ற ஜெட் விமானங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் விமானங்கள் பெரியவை" என்று கூறினார்.

இதையும் படிக்க: ரஷ்யா உதவியின்றி விண்வெளி நிலையத்தை பராமரிக்க முயற்சி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com