\
ரஷ்ய அதிபர் புதின் தனி விமானத்தை நோட்டமிட்டு 'நோட்' பண்ணும் இளைஞர் -ஓர் ருசிகர தகவல்

ரஷ்ய அதிபர் புதின் தனி விமானத்தை நோட்டமிட்டு 'நோட்' பண்ணும் இளைஞர் -ஓர் ருசிகர தகவல்

ரஷ்ய அதிபர் புதின் தனி விமானத்தை நோட்டமிட்டு 'நோட்' பண்ணும் இளைஞர் -ஓர் ருசிகர தகவல்
Published on

உக்ரைன் நாட்டையே யுத்தம் என்ற பெயரில் நவீன ஆயுதங்களை கொண்டு துவம்சம் செய்து வருகிறது ரஷ்யா. உலக நாடுகள் அதனை வன்மையாக கண்டித்த போதும் கண்டும் காணாமல் தனது படைகளை உக்ரைனில் முன்னோக்கி நகர்த்துகிறது ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயணித்து வரும் தனி விமானத்தை டிராக் செய்து, அதன் லொகேஷனை பகிர்ந்து வருகிறார் 19 வயது இளைஞர் ஜாக் ஸ்வீனி. 

முன்னதாக இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்கை பின் தொடர்ந்து வந்தார். தற்போதும் அவர் மஸ்கை தொடர்ந்து வருகிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் புதின் விமானத்தை அவர் தொடர்வது உறுதியாகி உள்ளது. 

புதின் நகர்வுகளை அறிந்து ‘@Putinjet’ என்ற ட்விட்டர் பக்கத்தில் தானியங்கு முறையில் சில மணிகளுக்கு ஒரு முறை என அப்டேட் கொடுத்து வருகிறார். அந்த விமானம் எங்கு உள்ளது என்ற விவரமும் அதில் அடங்கும். இருந்தாலும் ரஷ்ய நாட்டு அரசை சார்ந்த முக்கிய நபர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் அந்த விமானத்தில் புதின் பயணிக்கிறார் என்பது தனக்கு உறுதியாக தெரியாது எனவும் அந்த ட்விட்டர் கணக்கின் டிஸ்க்ரிப்ஷனில் தெரிவித்துள்ளார். 

தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இதனை செய்து வருவதாக ஸ்வீனி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்ய நாட்டு முக்கிய நபர்கள் பயணிக்கும் விமானத்தையும் டிராக் செய்து @RUOligarchJets என்ற ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார் ஸ்வீனி. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com