உலகம்
வீட்டில் தீ பிடித்து 19 பேர் பலி: சீனாவில் சோகம்!
வீட்டில் தீ பிடித்து 19 பேர் பலி: சீனாவில் சோகம்!
சீனாவில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் தெற்கு தக்ஷின் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 19 பேர் பலியானார்கள். 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.