சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு ட்ரம்ப் வைத்த செக்..!
சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட முதல் கட்ட பட்டியலில் 18 ஆயிரம் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை இந்த பட்டியலை தயாரித்துள்ளது.
இதன்படி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் மக்கள் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். மெக்சிகோ மற்றும் எல் சல்வடார் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவதாக, இந்தியாவிலிருந்து மட்டுமே இதுவரை 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை வெளியேற்ற வாடகை விமானத்தை அமெரிக்க அரசு ஏற்கனவே பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.