\
ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் பலி

ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் பலி

ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் பலி
Published on

ஆப்கானிஸ்தானின் இன்று காலை நடந்த கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது கோஸ்ட் நகரம். இங்கு அமெரிக்க ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 18 பேர் பலியாயினர். 2 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் போலீசை குறி வைத்து நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். 
காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடியாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான் தீவிரவாதிகள், ரம்ஜான் மாத தொடக்கத்திலேயே தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com